போதிய சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் இலஞ்சக் குற்றச்சாட்டில் இருந்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஜப்பானின் தாய்ஸ் நிறுவனத்திடம் கட்டுமான ஒப்பந்ததாரர் ஒருவர் இலஞ்சம் கேட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.
பின்னர், இது தொடர்பாக விசாரணை நடத்த மூவரடங்கிய குழுவொன்றை நியமித்த ஜனாதிபதி, அமைச்சருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என அறிவித்தார்.
ஆனால் அந்த குழுவின் அறிக்கையை ஏற்க முடியாது என்றும், அதை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரிக்க வேண்டும் என்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இதன்படி, துறைமுகங்கள் மற்றும் கடற்படை விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் முழுமையான விசாரணை நடத்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதுடன்இ அமைச்சருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என தெரியவந்துள்ளது.