Thursday, November 14, 2024
26.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டு80 அழகிகள் இலங்கை வருகை

80 அழகிகள் இலங்கை வருகை

80 நாடுகளைச் சேர்ந்த 80 அழகிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நேற்று (19) தெரிவித்தார்.

மிஸ் டூரிசம் வேர்ல்ட் இறுதிப்போட்டி டிசம்பர் 8 முதல் 21 வரை கொழும்பில் நடைபெறவுள்ளது.

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தலைமையில் நாட்டின் புகழுக்காகவும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காகவும் இநிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

80 நாடுகளிலிருந்து வரும் அழகிகள் 2 வாரங்கள் நாட்டில் தங்கியிருப்பதுடன் கண்டி, அனுராதபுரம், பொலன்னறுவை, சிகிரியா, ஹபரணை, எல்ல, அறுகம்பே, மிரிஸ்ஸ உள்ளிட்ட முக்கிய சுற்றுலா இடங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.

மேலும் மிஸ் டூரிசம் வேர்ல்ட் ஃபைனல் 2022 இன் உலகளாவிய இயக்குனர் டேவிட் சிங்கும் நாட்டுக்கு வரவுள்ளார்.

இந்த 80 அழகிகள் இந்த இரண்டு வாரங்களில் இலங்கை முழுவதும் பயணம் செய்யும் போது புகைப்படங்களையும் கருத்துக்களையும் தங்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்வார்கள்.

இந்த டிஜிட்டல் யுகத்தில் இலங்கையின் சுற்றுலா சந்தைப்படுத்துதலில் இது மிகவும் திறமையான படியாக இருக்கும். இறுதிப் போட்டியில் சிறந்த 5 புகைப்படங்கள் தெரிவு செய்யப்பட்டு அதற்கேற்ப பரிசுகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது .

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles