Wednesday, January 15, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசூடானில் பழங்குடியினருக்கு இடையில் மோதல்: 14 பேர் பலி

சூடானில் பழங்குடியினருக்கு இடையில் மோதல்: 14 பேர் பலி

வடக்கு ஆபிரிக்க நாடான சூடானில் ஏராளமான பழங்குடி இனங்கள் உள்ளன. இவர்களுக்குள் அவ்வப்போது மோதல் ஏற்படுவது வழக்கமாகும்.

இந்த நிலையில் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள ஜோங்லே மாகாணத்தின் துக் நகரில் பழங்குடியினத்தை சேர்ந்த இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து மோதலில் ஈடுபட்ட ஒரு பிரிவினருக்கு சொந்தமான கால்நடை பண்ணைக்குள் எதிர் தரப்பினர் புகுந்து கொடூர தாக்குதலில் ஈடுபட்டனர்.

இரு தரப்பையும் சேர்ந்தவர்கள் கூர்மையான ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன்,இந்த மோதலில் ஏராளமான கால்நடைகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles