Tuesday, May 27, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிசேட தேவையுடைய குழந்தைகளுக்கு தேசிய கொள்கை தயாரிக்க அவதானம்

விசேட தேவையுடைய குழந்தைகளுக்கு தேசிய கொள்கை தயாரிக்க அவதானம்

இலங்கையில் விசேட தேவையுடைய குழந்தைகளுக்கான நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான தேசிய கொள்கையொன்றைத் தயாரிப்பதன் அவசியம் குறித்து சிறுவர்களுக்கான நாடாளுமன்ற ஒன்றியம் கவனம் செலுத்தியுள்ளது.

சிறுவர்களுக்கான நாடாளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் ரோஹினி குமாரி விஜயரத்ன தலைமையில் கூடிய போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள குழந்தைகளின் நல்வாழ்வு தொடர்பில் ஒன்றியம் எடுக்கக்கூடிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

பெண்கள், குழந்தைகள் விவகார அமைச்சு மற்றும் அதனுடன் தொடர்புபட்ட வேறு நிறுவனங்கள், காவல்துறை, காவல்துறை பெண்கள் பிரிவு, யுனிசெப் உள்ளிட்ட நிறுவனங்களுடன், சிறுவர்களின் பாதுகாப்புத் தொடர்பிலான பிரச்சினைகள் குறித்தும், அவற்றை நிவர்த்தி செய்வதற்கான யோசனைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாட இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles