தமிழகத்தின் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்தச் சந்திப்பு சென்னை, பாலவாக்கத்தில் உள்ள சீமானின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
இதன் போது, உலக அரங்கின் சமகால அரசியல் நகர்வுகள், அதிகூடிய சமூக, பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியிலும் இலங்கையில் தமிழர்களின் வாழ்வாதாரம், வாழ்வுரிமைக்காக போராடும் ஈழத்தமிழர்களின் எதிர்கால நலன்கருதி முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.