இலங்கை நாவலாசிரியர் ஷெஹான் கருணாதிலக்க, 2022 ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசை (The Booker Prize) நேற்று (17) வென்றுள்ளார்.
2011 ஆம் ஆண்டு தனது முதல் நாவலான ‘சைனாமேன்’ (Chinaman) மூலம் ஷெஹான் கருணாதிலக்க இலக்கிய வருகையைக் தொடர்ந்தார்.
சைனாமேன் புத்தகம் கிரிக்கெட்டைப் பற்றி எழுதப்பட்ட இரண்டாவது சிறந்த நாவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
புக்கர் பரிசை வென்ற Seven moons of Mali Almeida, இவரது இரண்டாவது நாவல்.
அவருக்கு பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் மனைவி கமிலா பார்க்கர் இந்த விருதை வழங்கினார்.
ஷெஹான் கருணாதிலவுக்கு 50,000 பவுண்ட் பரிசு வழங்கப்பட்டுள்ளது.