நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை கண்டித்து கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் இன்று மாட்டு வண்டியில் பிரதேச சபைக்கு பிரவேசித்துள்ளனர்.
முள்ளியவளை விநாயகர் ஆலயத்திலிருந்து, பிரதேச சபை நோக்கி அவர்கள் மாட்டு வண்டியில் பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் இவ்வாறு மாட்டு வண்டியில் சென்றுள்ளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.