கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவிற்குப்பட்ட முகமாலை பகுதியில் டிப்பர் மற்றும் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த பேருந்தில் 45 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது.
கண்ணிவெடி அகற்றும் பிரிவினரின் பேருந்து மீது டிப்பர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த அனைவரும் பளை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், அவர்களில் 17 பேர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 12 ஆண்களும் 5 பெண்களும் உள்ளடங்குவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

