Saturday, September 21, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொத்து ரொட்டியின் விலை 50 ரூபாவால் குறைந்தது

கொத்து ரொட்டியின் விலை 50 ரூபாவால் குறைந்தது

கொத்து ரொட்டியின் விலையை 50 ரூபாவால் குறைக்க சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் இன்று (15) தீர்மானித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டதன் பயனை நுகர்வோருக்கு வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கோதுமை மாவின் மொத்த விலை நேற்று (14) முதல் 375 ரூபாவில் இருந்து 290 ரூபாவாக குறைக்கப்பட்டது.

எவ்வாறாயினும், கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டாலும், பாணின் விலையில் மாற்றம் ஏற்படாது என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles