Tuesday, November 19, 2024
27.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொய், நம்பாதீர்!

பொய், நம்பாதீர்!

புனர்வாழ்வு பணியகம் சட்டம், போராட்டத்தில் பங்குபற்றியவர்களை இலக்கு வைத்து உருவாக்கப்படவில்லை என இலங்கையின் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தண்டிக்கவே இந்த சட்டத்தை பயன்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகச் சிலர் கருதுகின்றனர்.

எனினும் அது தவறான செய்தியாகும் என்று விஜயதாச குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கில் மோதல்கள் முடிவுக்கு வந்த நிலையில் நீண்டகாலத்துக்கு முன்னரே புனர்வாழ்வு பணியகம் திட்டம் வரையப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.

போருக்கு பின்னரான காலத்தில் அவர்களுக்கு புனர்வாழ்வளிக்க எந்த சட்டக் கட்டமைப்பும் இல்லை, அதன் விளைவாக, அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கக்கூடிய சட்ட கட்டமைப்பை அறிமுகப்படுத்த அரசாங்கம் தொடர்ச்சியாக பரிசீலித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

இது ஆரம்பத்தில் சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நோக்கத்துடன் இருந்தது.
ஆனால் பின்னர், அது போதைக்கு அடிமையானவர்களுக்கு விரிவடைந்தது.

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின்போது தவறாக நடத்தப்பட்டவர்களுக்கும் இந்த சட்டத்தின்கீழ் மறுவாழ்வு அளிக்கப்பட்டால், அது, சமுதாயத்துக்கும் நன்மை பயக்கும் என்று விஜயதாச குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles