Friday, June 19, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை

இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை

இன்றைய தினம் மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டை சூழவுள்ள தாழ்வான வளிமண்டலத்தின் தளம்பல் நிலைமை தொடரும் எனவும் அதனால் நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் கனமாக இருக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் பெய்யும் வேளைகளில், தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களைக் கோருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles