Thursday, September 18, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதிலினி மீது மற்றுமொரு குற்றச்சாட்டு

திலினி மீது மற்றுமொரு குற்றச்சாட்டு

திலினி பிரியமாலி உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு எந்தவித வரிக் கொடுப்பனவையும் செலுத்தியிருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் அபேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு இறைவரி சட்டத்திற்கு அமைய திலினி பிரியமாலி தவறிழைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக அவரிடம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் அபராதம் விதிக்க முடியும் அதன் ஆணையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் அபேரத்ன தெரிவித்துள்ளார்.

நிதி மோசடி தொடர்பில் கைதான அவர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வெளிநாடுகளில் நிதி வைப்பு மற்றும் மேலும் சில வர்த்தகங்களுக்கான நிதி வைப்புக்காக இலாபத்தை பெற்றுத்தருவதாக கூறி அவர் உலக வர்த்தக மைய மேற்கு கோபுரத்தின் 34 ஆம் தளத்தில் நிறுவனம் ஒன்றை நடத்திச் சென்றிருந்தார்.

கோடீஸ்வர வர்த்தகர்கள், வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் அவரது நிறுவனத்தில் வைப்பு செய்துள்ளதாக தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles