சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) நேற்று சிறந்த டெஸ்ட் தரப்படுத்தல் பட்டியல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி சகலதுறை வீரர்களுக்கான பட்டியலில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா முதலிடம் பிடித்துள்ளார்.
2 ஆவது இடத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜேசன் ஹோல்டரும் 3 ஆவது இடத்தில் இந்திய அணியின் அஸ்வினும் உள்ளனர்.
அத்துடன், துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில், அவுஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுஸன்சே முதலிடத்தில் உள்ளார்.
இரண்டாம் இடத்தில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட், 3 ஆம் இடத்தில் அவுஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் உள்ளனர்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், அவுஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸ் முதலிடத்திலும், இந்திய அணியின் அஸ்வின் 2 ஆவது இடத்திலும், தென் ஆபிரிக்கா அணியின் ககிசோ ரபாடா 3 ஆவது இடத்திலும் உள்ளனர்.