அரசாங்கத்தின் அண்மைய வரித் திருத்தம் பின்னடைவைச் சந்திக்கும் அபாயம் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா எச்சரித்துள்ளார்.
இந்த வரி அதிகரிப்பு முன்மொழிவு நாடாளுமன்றத்திலோ அல்லது நாடாளுமன்ற நிதிக் குழுவிலோ ஒப்புதலுக்காக முன்வைக்கப்படவில்லை என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், சர்வதேச நாணய நிதியத்துடன் இணங்கிக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நகர்வுகளில் ஒன்று வரி திருத்தம் என்றும், அது, பொதுமக்களிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.
இந்த உத்தேச சர்வாதிகார வரித் திருத்தங்கள் இன்னும் விவாதிக்கப்பட வேண்டும், அத்துடன் படிப்படியாக படிப்படியாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.