Friday, November 15, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோசாக்கு குறைப்பாடு 2 வீதத்தால் அதிகரித்துள்ளது - சுகாதார அமைச்சர்

போசாக்கு குறைப்பாடு 2 வீதத்தால் அதிகரித்துள்ளது – சுகாதார அமைச்சர்

நாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் போசாக்கு குறைபாடு 2 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (12) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக குழந்தைகளின் போசாக்கு நிலை தொடர்பில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக அண்மைய நாட்களில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த ஐந்து முதல் பத்து வருடங்களில் நாம் காணாமல் போய்விடலாம். ஆனால், நம் குழந்தைகள் குறைந்த மனநலம் மற்றும் குறைந்த ஆற்றல் கொண்ட குழந்தைகளாக மாறினால் அதற்கு நாம் ஒரு நாள் சபிக்கப்படுவோம்.

எனவே> அடிப்படை விlயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மக்களின் பசி> குழந்தைகளின் போசாக்கின்மை> கர்ப்பிணி தாய்மார்களுக்கான உணவு என்பனவே எனக்கு அடிப்படைத் தேவைகளாக தெரிகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles