நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியால், ஒவ்வொரு குடிமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில், தற்போது 96 இலட்சம் பேர் வறுமையில் வாடுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
அண்மையில், பேராசிரியர் வசந்த அத்துகோரள இதனை வெளிப்படுத்தியிருந்தார்.
2019ஆம் ஆண்டில் சுமார் 30 இலட்சம் பேர் வறுமையில் இருந்ததாகவும், இன்று அந்த எண்ணிக்கை 96 இலட்சமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை சமூகத்தில் வாழும் சுமார் 42 வீதமான மக்கள் தற்போது வறுமையில் வாடுவதாக தெரியவந்துள்ளது. இலங்கையில் வறுமை 26% ஆக இருந்தாலும்,உண்மையில் அது மிக அதிகமாக இருப்பதாக உலக வங்கியின் சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.