நாட்டின் நீர் பாவனையாளர்கள், சுமார் 620 கோடி ரூபாவை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு செலுத்தத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இருபது வெவ்வேறு நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் நூறு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை செலுத்தத் தவறியுள்ளதாக நீர் வழங்கல் சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலுவைத் தொகையை வசூலிக்கவும், நீண்ட நாட்களாக நிலுவைத் தொகையை செலுத்தாத தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் நீர் இணைப்பை துண்டிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நீர் கட்டணம் செலுத்தாத நபர்களில் அரசியல்வாதிகள், அரச உயர் அதிகாரிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலுவைத் தொகையை செலுத்துமாறு அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், நிலுவையில் உள்ள குடிநீர் கட்டணத்தை செலுத்தாத 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாவனையாளர்களின் குடிநீர் இணைப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் துண்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#Lankadeepa