பல்வேறு நபர்களிடம் பல கோடி ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி உள்ள சிறையிலிருந்து மேலும் ஒரு கைப்பேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கைப்பேசியும்குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (10) அவர் வசம் இருந்த கையடக்கத் தொலைபேசி ஒன்று கண்டெடுக்கப்பட்டதுடன், அது அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்த பெண் கைதி ஒருவரால் வழங்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரிய வந்தது.
அதற்காக 50இ000 ரூபா வழங்குவதாக திலினி பிரியமாலி குறித்த பெண்ணிடம் உறுதியளித்திருந்தார்.
மேலும், குறித்த கையடக்கத் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டபோது, அதை சிறைச்சாலை அதிகாரிகளிடம் கையளிக்காமல் அவர் தரையில் வீசீயதாக சிறைச்சாலை திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், கையடக்கத் தொலைபேசிக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை எனவும், அதன் தரவுகளை ஆராய்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.