2012 ஆம் ஆண்டு சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 15 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அக்குரெஸ்ஸ உள்ளூராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் ‘சருவா சுனில்’ என்றழைக்கப்படும் சாருவ லியனகே சுனிலை விடுதலை செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையிலிருந்து விடுவிக்குமாறு கோரி அவர் சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவுக்கு அமைய, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு 2020 ஜனவரி 17 அன்று கடின உழைப்புடன் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
2012ஆம் ஆண்டு மே 23ஆம் திகதி முதல் 2012ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அக்குரெஸ்ஸ பகுதியில் சிறுமி ஒருவரை ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்ததாக சட்டமா அதிபர் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.