Sunday, November 17, 2024
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோட்டாவின் சந்ததியினருக்காக நிர்மாணிக்கப்பட்ட விகாரை (photos)

கோட்டாவின் சந்ததியினருக்காக நிர்மாணிக்கப்பட்ட விகாரை (photos)

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னோர்கள் மற்றும் சந்ததியினருக்கு நன்றி செலுத்தும் முகமாக எலஹெர – மினிபுரகம கிராமத்தில் வசிக்கும் ஒருவர் பத்து இலட்சம் ரூபா செலவில் விகாரை ஒன்றை நிர்மாணித்து வழிபாடு செய்துள்ளார்.

எலஹெர –மினிபுரகம கிராமத்தைச் சேர்ந்த W.G.சந்திரசேன பண்டா (45) என்பவர், முன்பள்ளி ஒன்றிற்கு அருகாமையில் இந்த விகாரையை நிர்மாணித்து அங்குள்ள சிறுவர்களுக்கு வழங்கியுள்ளார்.

கூலி வேலை செய்து சம்பாதித்த பணத்தில் இந்த விகாரையை அவர் கட்டியுள்ளார்.

இதற்கு மேலதிகமாக, பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தந்தை பிலிப் குணவர்தனவுக்காக பிரசங்க பீடம் மற்றும் மேசை ஒன்றும் இவ்விகாரைக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

பிரதேசத்தில் பல பொது இடங்களில் ஐந்து விகாரைகளை நிர்மாணித்துள்ள இவர், படைப்பிரிவின் கீழ் சேவையாற்றிய இராணுவ சிப்பாய் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles