நாட்டின் 13 மாவட்டங்களுக்கு காலநிலை அவதான நிலையம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஊவா, கிழக்கு, வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும், குருணாகலை மாவட்டத்திலும் கடும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அங்குள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அனுராதபுரம், திருகோணமலை, பொலன்னறுவை, குருணாகலை, மாத்தளை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் வசிக்கின்றவர்கள் இடி மின்னலில் இருந்து தற்காத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.