‘எண்டூரன்ஸ்’ எனப்படும் கப்பலின் சிதைவுகள் 107 ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
1915ஆம் ஆண்டு கடல் பனியில் சிக்கி அந்தாட்டிக்கா – வெட்டல் கடற்பகுதியில் இந்த மரக்கப்பல் மூழ்கியது.
வெட்டெல் கடலில் 3,008 மீற்றர் ஆழத்தில் இக்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது அந்தாட்டிக்கா கடல் ஆய்வாளர் சேர். எர்னஸ்ட் ஷேக்லெட்டனின் கப்பலாகும்.
107 வருடங்களுக்கு பிறகு கடந்த சனிக்கிழமையன்று சேர். எர்னஸ்ட் ஷேக்லெட்டனின் 100ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, வெட்டல் கடலின் அடிப்பகுதியில் இதன் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.