Saturday, January 25, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் நெருக்கடிக்கு தீர்வுகாண நடவடிக்கை

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வுகாண நடவடிக்கை

இயன்ற அனைத்து அர்ப்பணிப்புக்களையும் செய்து, எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக, இலங்கை கனியவள களஞ்சியங்கள் முனைய நிறுவனத்தின் புதிய தலைவரான ஓய்வுநிலை மேஜர் ஜெனரல் எம்.ஆர்.டபிள்யு. டி சொய்ஸா தெரிவித்துள்ளார்.

இன்று (09) காலை தமது கடமைகளைப் பொறுப்பேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்கு வருகின்ற கப்பல்களிலுள்ள எரிபொருளை, களஞ்சியப்படுத்தும் முனையங்களுக்கு கொண்டு செல்வது இந்த நிறுவனத்தின் பணியாகும். குறித்த சந்தர்ப்பம் முதல் இடம்பெறும் பணிகள், தொடர்ச்சியாக செயற்திறனுடன் இடம்பெற வேண்டும் என்பது தமது நிலைப்பாடாகும்.

பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கை குறித்து, அடுத்துவரும் தினங்களில் ஆராய்ந்து, விரைவான நடவடிக்கையை எடுக்க உள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles