Tuesday, July 15, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅடுத்த மாதம் பணவீக்கம் அதிகரிக்கும் - மத்திய வங்கி ஆளுநர்

அடுத்த மாதம் பணவீக்கம் அதிகரிக்கும் – மத்திய வங்கி ஆளுநர்

நாட்டின் பணவீக்கம் இந்த மாதம் மேலும் அதிகரித்து அதன் பின்னர் வீழ்ச்சியடையும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

இந்த வருடத்தின் 7வது நாணயக் கொள்கை விளக்கத்தை அறிவிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கி எதிர்பார்த்ததை விட செப்டெம்பர் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த மாதம் பணவீக்கம் அதிகரித்து பின்னர் குறைவடையும் என கணிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் 67.8 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அம்மாதம் பணவீக்கம் 69.8 ஆக பதிவாகியிருந்தது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, இந்த மாதத்தை விட அடுத்த மாதம் பணவீக்கம் குறைவாக இருக்கும் என்றும், தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுக்கமைய, இந்த மாதத்தில் பணவீக்கம் அதிகரிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles