Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாடளாவிய ரீதியில் 19 குப்பை மலைகள் உருவாகியுள்ளன

நாடளாவிய ரீதியில் 19 குப்பை மலைகள் உருவாகியுள்ளன

உள்ளூராட்சி மன்றங்களின் கழிவுகளை அகற்றுவதால் நாடு முழுவதும் 19 குப்பை மலைகள் உருவாகியுள்ளதாக உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர நேற்று (06) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பதுளை மாவட்ட சபை உறுப்பினர் சமிந்த விஜேசிறி கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நான்கு குப்பை மலைகள் காடுகளுக்கு அருகாமையில் அமைந்திருப்பதால் சுற்றுச்சூழல் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புடன் ஒன்பது உரம் தயாரிக்கும்நிலையங்கள் இயங்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.

இந்தக் கழிவு மலைகள் தொடர்பில் உள்ளூராட்சி மன்ற அதிகாரிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles