22 ஆவது திருத்தச் சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இன்று அது தொடர்பில் விவாதம் நடத்துவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கான காரணம் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்றும் அறியமுடிகிறது.
இதனையடுத்து ‘எங்கே 22’ என்று லக்ஷ்மன் கிரியெல்ல கேட்டபோது, ‘பார்ப்போம்’ என்று சுசில் பிரேம்ஜயந்த சமாளித்தார் .
இதேவேளை, கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் 22வது திருத்தத்திற்கு எதிராக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பாரிய எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது