காய்ச்சல், சளி, இருமலில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக மருத்துவரின் பரிந்துரைக்கமைய வழங்கப்பட்ட, இந்திய மருந்து நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் சிரப் பருகி, காம்பியாவில் 66 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பின் ட்விட்டர் அறிவிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆபிரிக்க நாடான காம்பியாவில் சளி, இருமலைப் போக்க, இந்திய ‘மெய்டன் பார்மசியுட்டிகல்ஸ்’ நிறுவனம் தயாரித்த 4 வகையான சிரப்களை பயன்படுத்தியதால் குறித்த சிறுவர்கள் உயிரிழந்ததாக, உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ஏழை நாடான காம்பியா நாட்டு மக்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மருந்து வகைகளையே பயன்படுத்தி வருகின்றனர்.
Promethazine Oral Solution, Kofexmalin Baby Cough Syrup, Makoff Baby Cough Syrup மற்றும் Magrip N Cold Syrup ஆகிய 4 வகையான சிரப்களையே அவர்கள் பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் உடனடி விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
சிரப்களை பயன்படுத்திய சிறுவர்கள் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
#NDTV