Saturday, November 16, 2024
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் மனுக்கள் மீதான விசாரணை நிறைவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மனுக்கள் மீதான விசாரணை நிறைவு

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னரே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்த போதிலும் தடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பலருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை வெளியிடுவதை உச்ச நீதிமன்றம் இன்று ஒத்திவைத்துள்ளது.

அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றம் இன்று நிறைவடைந்தது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய ஆகியோர் அடங்கிய ஏழு பேர் கொண்ட அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

2019 ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்கத் தவறியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட 12 பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், ஜனாதிபதி விக்கிரமசிங்கவை பிரதிவாதியாக பெயரிட்டுள்ள மனுக்களை தொடர வேண்டாம் என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்மானித்துள்ளது.

தற்போதைய ஜனாதிபதிக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles