இலங்கையில் தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி ஆகிய நிறுவனங்கள் எரிபொருள் இறக்குமதி மற்றும் விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
அவற்றுக்கு மேலதிகமாக இலங்கையில் மேலும் பல நிறுவனங்களை எரிபொருள் வர்த்தகத்தில் ஈடுபட அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக முன்மொழியப்பட்டுள்ள பெற்றோலிய விசேட ஒழுங்குவிதிகள் சட்ட மூலத்துக்கு, நாடாளுமன்ற ஆலோசனைகள் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த தகவலை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
இதனடிப்படையில் இந்த சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டு அமுலாக்கப்படுவதன் ஊடாக, பல நிறுவனங்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்து, விநியோகிக்க இடம்கிடைக்கும் என அவர் கூறியுள்ளார்.