துருக்கியில் பணவீக்கம் 83 சதவீதமாக உயர்ந்துள்ளது.
துருக்கியில் 24 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வாறு பணவீக்கம் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போக்குவரத்து, உணவு உள்ளிட்ட பல துறைகளின் விலையேற்றம் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
எனினும், துருக்கியில் உள்ள சுயாதீன நிபுணர்கள் குழு அந்நாட்டின் பணவீக்கம் குறித்து ஆய்வு நடத்தியது, அதில் பணவீக்கம் 186 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளனர்