Wednesday, January 15, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெற்றோரின் கொடுமையிலிருந்து தப்பிக்க காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த 12 வயது சிறுமி!

பெற்றோரின் கொடுமையிலிருந்து தப்பிக்க காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த 12 வயது சிறுமி!

பெற்றோரால் தனக்கு இடையூறு ஏற்படுவதாக சிறுமியொருவர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு பாடசாலை சீருடையுடன் அச்சுவேலி காவல் நிலையத்தில் இன்றநேற்று (08) தஞ்சம் அடைந்துள்ளார்.

தனது தந்தை மதுபோதையில் வந்து தாயாருடன் தினமும் வாக்குவாதத்திலும் சண்டையிலும் ஈடுபடுவதாக தெரிவித்த குறித்த சிறுமி, தந்தையின் சித்திரவதையைப் பொறுக்கமுடியாமல் நேற்றையதினம் காவல்நிலையத்தை நாடியதாக தெரிவித்துள்ளார்.

தஞ்சமடைந்த குறித்த சிறுமியை கோப்பாய் பிரதேச செயலக நன்னடத்தை பிரிவினரிடம் ஒப்படைக்க அச்சுவேலி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

அச்சிறுமி வீட்டின் மூத்த பிள்ளை எனவும் அவருக்கு இரண்டு சகோதரர்கள் இருப்பதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles