நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு போராட்டக்காரர்களே காரணம் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
வீடுகளை அமைப்பதற்காக போராட வேண்டுமே தவிர வீடுகளை எரித்து நாசமாக்குவதற்காக அல்ல எனவும், போராட்டம் நாட்டை பல்வேறு நெருக்கடிகளுக்கு கொண்டு சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நேற்று (3) அலரி மாளிகையில் நடைபெற்ற உலக வாழ்விட தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த போராட்டத்தினால் கிடைத்த பயன் என்ன? சிரமத்துடன் கட்டியெழுப்பப்பட்ட பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. சர்வதேசத்தில் நமக்கு இருந்த மதிப்பு குறைந்து விட்டது.அரசாங்கம் என்ற வகையில் நாட்டின் அபிவிருத்திக்காக பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க இருந்தோம். கொவிட் மற்றும் போராட்டம் காரணமாக அவற்றை பூர்த்தி செய்ய முடியாமல் போனது. இந்த தடைகள் இல்லாதிருந்தால் பொருளாதார நெருக்கடிக்கு ஏற்கனவே தீர்வு கண்டிருப்போம் என்றார்.