இன்று (04) முதல் எரிபொருள் விநியோகப் பணிகளில் இருந்து விலகி இருக்கப் போவதாக இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 45 சதவீத கழிவு சலுகையை நீக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளமைக்கு எதிராக இந்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதனால் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படும் என்றும், எரிபொருளுக்கான வரிசை மீண்டும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் கருத்துகள் வெளியிடப்படுகின்றன.
இந்நிலையில், எரிபொருள் விநியோகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் பொதுமக்கள் தேவையில்லாமல் பீதியடைய வேண்டாம் என்றும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.