Sunday, November 17, 2024
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயர்தர பரீட்சை பிற்போடப்படுமா?

உயர்தர பரீட்சை பிற்போடப்படுமா?

இரண்டாவது தடவையாக பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் நலன்கருதி க.பொ.த உயர்தரப் பரீட்சையை பிற்போடுவது தொடர்பில் ஆலோசிக்கவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அண்மையில், வெளியான உயர்தரப் பெறுபேறுகளுக்கு அமைய, போதியளவு பெறுபேறினை பெறாத மாணவர்களுக்கு, இரண்டாவது தடவையாக பரீட்சை எழுத தயார்படுத்துவதற்கான காலம் போதுமானதாக இல்லை என இன்றைய பாராளுமன்ற அமர்வில் தெரிவிக்கப்பட்டது.

எனவே, மறுமுறை உயர்தரப்பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கு, தயார்படுத்தல்களுக்காக மேலதிக காலஅவகாசம் தேவையென நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹினி கவிரத்ன, உதித் பிரேமரத்ன மற்றும் ஹேஷா வித்தானகே உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதிலளித்த கல்வியமைச்சர், ஏற்கனவே கடந்த 2 வருடங்களாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் இடையூறு ஏற்பட்டு வருகிறது.

மேலும் அடுத்த வருடத்துக்கு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள பரீட்சைகளிலும் மாற்றம் ஏற்படுத்த வேண்டி ஏற்படும்.

எவ்வாறாயினும் கோரிக்கைகளை ஆராய்ந்து, பரீட்சை பிற்போடுவது சாத்தியமா என்பது குறித்து பரீட்சை ஆணையாளர் நாயகத்துடன் ஆலோசிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles