பொது போக்குவரத்தில் இருந்து அனைத்துமே டீசலில் தங்கியிருப்பதாகவும், டீசல் விலை குறைக்கப்பட்டால் தற்போது 70% ஆக இருக்கும் பணவீக்கத்தை குறைக்க முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பெற்றோல் விலையை குறைப்பதில் மக்களுக்கு எந்த நிவாரணமும் இல்லை.
மீன், காய்கறிகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விலை டீசல் விலையைப் பொறுத்தே கணக்கிடப்படுகிறது.
எனவே இது தவறான மற்றும் துரதிர்ஷ்டவசமான முடிவு.
டீசல் விலை குறைக்கப்பட்டால், பஸ் கட்டணத்தை திருத்தியிருக்கலாம் என்றார்.