பாடத்திட்டத்தினை பல வருடங்களாக மனப்பாடம் செய்து பரீட்சைக்கு முகங்கொடுக்கும் பிள்ளைகளை மன அழுத்தத்தில் இருந்து விடுவிப்பதற்காக கடுமையாக உழைத்து வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் வருடாந்த தேசிய கணிதப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் கலந்துக் கொண்ட போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
கல்வி சீர்திருத்தங்களுக்கு அப்பாற்பட்ட கல்வி மாற்றத்தின் ஊடாக தற்போதுள்ள பரீட்சை முறைமை மாற்றப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்கள் புகலிடமாக மாறும் வகையில் பாடநெறிகள் தொழில்நுட்ப ரீதியாக புதுமைப்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட வேண்டும்.
இந்த மாற்றம் ஆரம்ப வகுப்பறை வழியாக நடைபெற வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.