Thursday, February 12, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவைத்தியர்களுக்கு 60 வயதில் ஓய்வு வழங்குவது சிறந்த தீர்மானம்

வைத்தியர்களுக்கு 60 வயதில் ஓய்வு வழங்குவது சிறந்த தீர்மானம்

ஏனைய அரச உத்தியோகத்தர்களை போலவே வைத்தியர்களுக்கும் 60 வயதில் ஓய்வு வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானம் சிறந்ததொரு தீர்மானம் எனவும் இளம் வைத்தியர்களின் தொழில் வாழ்க்கைக்கு சிறந்ததொரு தீர்மானம் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் மன்றத்தின் தலைவர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்தார்.

60 வயதில் வைத்தியர்கள் ஓய்வு பெறுவதால் சுகாதார சேவை வீழ்ச்சியடையும் என சிலர் மேற்கொள்ளும் பிரசாரம் தவறானது என தெரிவித்த அவர், நாட்டில் திறமையான இளம் வைத்தியர்கள் அதிகளவில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஓய்வு முடிவை ஆதரித்து சுமார் 200 மருத்துவர்கள் கடிதம் அனுப்பியுள்ளதாகவும், நாட்டில் நிபுணத்துவ மருத்துவர்களுக்கு பஞ்சம் இருக்காது எனவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு, காலி, கண்டி போன்ற பகுதிகளில் பணிபுரியும் சில விசேட வைத்தியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக உயர்த்துமாறு கோரி வருவதாகவும்,இந்தக் கோரிக்கைக்கு அரசாங்கம் பதிலளிக்கக் கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles