Wednesday, January 15, 2025
25.5 C
Colombo
செய்திகள்உலகம்யுக்ரைன் ஜனாதிபதி வெளியிட்ட துணிச்சலான காணொளி

யுக்ரைன் ஜனாதிபதி வெளியிட்ட துணிச்சலான காணொளி

யாரையும் பார்த்து எனக்கு பயமில்லை, தலைநகர் கீவ்வில் தான் இருக்கிறேன் என்று யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்யா யுக்ரைன் மீது இன்று 13 ஆவது நாளாக தாக்குதல் மேற்கொண்டுவருகிறது. யுக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றன.

இதனால் யுக்ரைன் – ரஷ்ய படைகளுக்கு இடையே கடுமையான மோதல் இடம்பெற்று வருகிறது. இந்த போரில் இரு தரப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்ற நிலையில், இந்த முயற்சிகளின் பலனாக யுக்ரைனின் சில பகுதிகளில் ரஷ்யா தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

இதற்கிடையில், யுக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக ரஷ்ய தரப்பிலிருந்து பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், யுக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி நேற்று முன்தினம் புதிய காணொளியொன்றை வெளியிட்டிருந்தார்.

தலைநகர் கீவ்வில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இருந்தவாறு அவர் குறித்த காணொளியை பதிவு செய்துள்ளார். அதில் அவர், “நான் தலைநகர் கீவ்வில் உள்ள பென்கோவா பகுதியில் தான் இருக்கிறேன்.

யாரைக்கண்டும் எனக்கு பயமில்லை. புட்டினை எதிர்கொள்ள எவ்வளவு நாள் தேவைப்படுகிறதோ அவ்வளவு நாள் நான் தலைநகரில் தான் இருக்கப்போகிறேன்.

எங்களின் இந்த தேசபக்தி போரில் வெற்றி பெறுவதற்கு என்ன தேவையோ அதை செய்வோம். ரஷ்யாவுக்கு எதிரான போரில் யுக்ரைனிய ஆயுத படைகளின் சேவைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

யுக்ரைன் வெற்றி பெறும் என்று நம்பிக்கையுடன் மீண்டும் கூறுகிறேன்.

நாங்கள் தொடர்ந்து போராட்ட குணத்தை வெளிப்படுத்தி வருகிறோம். நாங்கள் அனைவரும் களத்தில் இருக்கிறோம். என்னுடன் எனது குழுவும் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

காணொளியை பார்வையிட

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles