Sunday, November 2, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதர்ஷன் தர்மராஜின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக கொழும்பில்

தர்ஷன் தர்மராஜின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக கொழும்பில்

பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜின் பூதவுடல், மக்கள் அஞ்சலிக்காக கொழும்பு – பொரளை ஜயரத்ன மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது பூதவுடல் இன்று மாலை 3 மணி வரை கொழும்பில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

அதனைத் தொடர்ந்து இன்று மாலை அன்னாரது பூதவுடல் சொந்த ஊரான இறக்குவானை பகுதியை நோக்கி கொண்டு செல்லப்பட உள்ளது.

இறக்குவானை – கொட்டலை பகுதியிலுள்ள அன்னாரது வீட்டில் பூதவுடல்இ நாளை மற்றும் நாளை மறுதினங்களில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

இந்தநிலையில் அவரது பூதவுடல் எதிர்வரும் புதன்கிழமை இறக்குவானை பொது மயானத்தில் தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles