Tuesday, September 16, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாடாளுமன்றில் இடம்பெறும் உணவு மோசடி

நாடாளுமன்றில் இடம்பெறும் உணவு மோசடி

இறைச்சி, மீன், முட்டை போன்ற உணவுப் பொருட்கள் நாடாளுமன்ற உணவு அறைப் பிரிவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் உணவுப் பொருட்களை இவ்வாறு வெளியேற்றப்படுவதால் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இறைச்சி, மீன், முட்டை போன்ற உணவுப் பொருட்களின் விலை உயர்வால், சில தொழிலாளர்கள் தினமும் ரகசியமாக இந்த பொருட்களை தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்வதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பாக சில அதிகாரிகள் ஏற்கனவே விடயத்துக்கு பொறுப்பான அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

சமீப நாட்களாக வேகவைத்த முட்டைகள் அதிகளவில் வெளியே எடுத்துச் செல்லப்படுவதாகவும், சமைத்த உணவுகள் மட்டுமின்றி உலர் உணவுப் பொருட்களும் நாடாளுமன்றத்திற்கு வெளியே கொண்டு செல்லப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#Lankadeepa

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles