Tuesday, September 16, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயர்தர மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சையை பிற்போட தீர்மானம்

உயர்தர மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சையை பிற்போட தீர்மானம்

மத்திய மாகாணத்தில் எதிர்வரும் ஐந்தாம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சையை பிற்போடுவதற்கு மாகாண கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அன்றைய தினம், பாடசாலைகளில் நவராத்திரி பூசை இடம்பெறவுள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

இதன்படி, எதிர்வரும் 17ஆம் திகதி குறித்த பரீட்சையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மத்திய மாகாணத்தின் சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles