அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒரு மாநாட்டில் கலந்துகொண்டபோது, மறைந்த எம்பி ஒருவர் மாநாட்டில் கலந்து கொண்டாரா என வினவியுள்ளார்.
இந்த மாநாட்டில் ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர் ஜெக்கி வொலோர்ஸ்கியும் இருக்கிறாரா என அமெரிக்க ஜனாதிபதி கேட்டுள்ளார்.
ஜெக்கி வொலோர்ஸ்கி கடந்த ஆகஸ்ட் 3 ஆம் திகதி கார் விபத்தில் காலமானார்.
அமெரிக்க ஊடக அறிக்கையின்படி, ஜெக்கி வொலோர்ஸ்கி மரணித்ததை மறந்து அமெரிக்க ஜனாதிபதி அவரை ஞாபகப்படுத்தியிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.
#NDTV