Saturday, January 18, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டு15 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய நபர் 13 ஆண்டுகளின் பின் சிக்கினார்

15 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய நபர் 13 ஆண்டுகளின் பின் சிக்கினார்

15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் டிஎன்ஏ பரிசோதனையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று (28) எஹலியகொட பொலிஸாரால் பலீகல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டு எஹலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொஸ்கஹமுகலன பிரதேசத்தில் பாடசாலைச் சீருடையுடன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எஹலியகொட பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் இன்று (29) அவிஸ்ஸாவல மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles