நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டிற்காக தண்டனையிலிருந்து விலக்கிக்கொள்வதற்கான காரணங்களை சமர்ப்பிக்க எதிர்வரும் 13 ஆம் திகதி நீதிமன்றில் பிரசன்னமாகுமாறு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பாணை இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான நிஸ்ஸங்க பந்துல மற்றும் ஆர் குருசிங்க ஆகியோரினால் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.