வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது
அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன இதனை தெரிவித்தார்.
பெறுமதி சேர் வரி மற்றும் சமூக பாதுகாப்பு ஒத்துழைப்பு வரி அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் வெதுப்பக உணவு பொருட்களின் விலையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.