எரிவாயு விநியோகத்தை தொடர்ச்சியாக பேணுவதற்காக உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட கடன் தொகையில் ஒரு பகுதியை திறைசேரிக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும், முழு கடன் தொகையும் டிசம்பர் மாதத்தில் திறைசேரிக்கு செலுத்தப்படும் எனவும் அதன் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
‘உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட 70 மில்லியன் டொலர் தொகையை மீண்டும் திறைசேரிக்கு செலுத்த ஆரம்பித்துள்ளோம். ஜூலை மாதம் உலக வங்கியின் உதவித் தொகையைப் பெறுவோம்.
உலக வங்கியின் பெறப்பட்டு தற்போது மீதமுள்ள 70 மில்லியன் உடாலர் கப்பல் போக்குவரத்துக்கு செலவழிக்கப்படுகிறது.
செப்டம்பம் மாதம் 6.5 பில்லியனை செலுத்தியுள்ளோம். மேலும் 8 பில்லியன் அக்டோபர் மாதத்தில் கருவூலத்திற்கு செலுத்த முடியும் என்று நம்புகிறோம் என்றார்.