மத வழிபாட்டுத் தலங்களில் சூரிய மின் தகடுகளை பொருத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (28) இடம்பெற்றது.
மின்சார அமைச்சில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிவெனாக்களுக்கு முன்னுரியைளித்து இந்திய கடன் திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள அரசு கட்டட சூரிய சக்தி திட்டத்தில் மத வழிபாட்டு தலங்களையும் இணைக்கக முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, விரைவில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.