இலங்கைக்கு நிலக்கரியை விநியோகம் செய்வதற்கான கேள்வி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச ஏல முறைமையின் அடிப்படையில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பதிவு செய்யப்பட்ட அதே நேரம் இலங்கைக்கு குறைந்தபட்சம் 180 நாட்களுக்கு கடன் அடிப்படையில் நிலக்கரியை விநியோகிக்கக்கூடிய யாரும் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
அதேநேரம் நீண்ட காலத்துக்கு இலங்கைக்கு நிலக்கரியை விநியோகிப்பதற்கான கேள்வி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாக உள்ளது.