நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாவது அலகில் பழுது ஏற்பட்டுள்ள இடத்தை, பராமரிப்பு குழுவினர் இன்று ஆய்வு செய்ய உள்ளனர்.
இதற்கமைய, நாளை மறுதினத்திற்குள் திருத்தப்பணிகளில் முன்னேற்றம் ஏற்படும் என அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் 3ஆம் அலகில் இருந்து இழந்த 270 மெகாவோட் மின்சாரம் மீண்டும் தேசிய கட்டமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.