கொழும்பு, பாலத்துறை – கஜிமாவத்தை தீ விபத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும் நேற்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி 71 வீடுகளில் இருந்த 306 பேர் தீ விபத்தினால் இடம்பெயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
60 வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன் இடம்பெயர்ந்தவர்களில் 106 பேர் சிறுவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இக்குழுவினர் தற்போது மோதர உயன சனசமூக மண்டபத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.